|
||||
பழனி நகர் சங்க காலப் பெருமையுடைய மிகப் பழமையான நகரம் ஆகும். சங்க இலக்கியங்கள் பழனி மலையை பொதினி என்றே குறிப்பிடுகின்றன. பொதினி என்ற பெயர்தான் பழனி என்று மருவிற்று என்று வரலாற்று அறிஞ்ர்கள் கருதுகின்றனர். சங்க இலக்கியங்களில் ஒன்றான திரு முருகாற்றுப்படை பழனி தலத்தில் அமைந்துள்ள ஆவினன்குடியை மூன்றாம் படை வீடாகக் குறிப்பிடுகின்றது. பழனி திருத்தலம் முற்காலத்தில் கொங்கு நாட்டின் தெற்கு எல்லையாக விளங்கி வந்துள்ளது. பழனி பகுதியைக் கல்வெட்டுக்கள் வையாபுரி நாடு என்றே குறிப்பிடுகின்றன. இவ்வையாபுரி நாட்டை வையாபுரிக்கோப்பெரும் பேகன் என்ற மன்னன் ஆண்டு வந்துள்ளான். முற்காலத்தில் சித்தர்கள் பலர் வையாபுரி நாட்டில் வாழ்ந்துள்ள்னர். பழனித் தலத்தின் பெருமை மலைக் கோயில் பற்றி... போகரைப் பற்றி...
இடைக்காடர், கருவூரார், புலிப்பாணி, கொங்கண்ர் ஆகியோர் போகரிடம் அஷ்டமா சித்துகளைப் பயின்றனர். போகர் தமது மாணாக்கர்களுடன் சீனதேசம் சென்று பல கருவி நூல்களும், இயந்திர நூல்களும் இயற்றி அங்குள்ளவர் அறிவியல் ஞானம் பெறச் செய்தார். சிலகாலம் கழித்து தமிழ் மண்ணுக்குத் திரும்பியவர், பழனியில் வாழ்ந்தார். நவபாஷாணங்களின் சேர்க்கையில் பழனி மலை முருகன் சிலையை உருவாக்கினார். இவரது மருத்துவ ஞானம் அளவற்றது. இவருடைய வைத்திய நூல்களில் நிகண்டு, வைத்தியம், துவாத காண்டம், சப்ப காண்டம், வைத்திய சூத்திரம், ஆகியவையும், ஆன்மீகத்தில் ஞான் சூத்திரம், அட்டாங்க யோகம், ஞான சாராம்சம் ஆகியவையும் குறிப்பிடத்தக்கது. போகரின் சமாதி...
போகரின் சமாதி பழனி மலையில் உட் பிரகாரத்தில் அமைந்துள்ளது. இங்கே போகர் பூஜித்து வந்த நவ துர்கா, புவனேஸ்வரி, மற்றும் மரகதலிங்கம் சிலைகளுக்கு தினசரி பூஜைகள் நடை பெற்று வருகிறது.
பழனி கோவில்கள் பற்றி...
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலைச் சார்ந்த 38 - உப கோயில்கள் அமைந்துள்ளது. இக்கோயில்களில் கீழ்கண்ட கோயில்கள் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 1. அருள்மிகு திரு ஆவினன் குடி கோயில் பழனி மலை நடை திறக்கும் நேரம்... மலைக்கோயில் சந்நிதி சாதாரண் நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். கிருத்திகை மற்றும் முக்கிய திருவிழா நாட்களில் காலை 4 மணி முதல் இரவு இராக்கால பூஜை முடியும் வரை திறந்திருக்கும். சிறப்பு பூஜைகள்... 1. விளா பூஜை - காலை - 6.50 பழனி திருக்கோயிலின் தங்கும் விடுதிகள்.... 1. தண்டபாணி நிலையம். - தொலைபேசி : 91- 4545 - 242325 பழனி திருக்கோயில் சம்பந்தமான பிற தகவல்களுக்கு... இனை ஆணையர் / நிர்வாக அதிகாரி, உங்களது மேலான கருத்துக்களை எங்களுக்கு அனுப்பவும் |
||||
TAMIL PAGES UNDER CONSTRUCTION |
||||